திமுக தலைவர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைவில் ஐ.நா. சபைக்கு அனுப்பப்படும். தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதை கொண்டு செல்வார்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது. எனவே அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகழகத்தின் கோரிக்கையும் அதுதான். இலங்கை விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதும், இந்திய வீரர்கள் அங்கு சென்று விளையாடுவதும் வழக்கமான ஒன்று. எனவே, விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்புவது சரியான முடிவல்ல.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினைகளை எழுப்பி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்புவதே மக்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்காகத்தான். எனவே, பாராளுமன்றத்தை முடக்குவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி துரை.தயாநிதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து கருத்து கேட்டபோது, அதுபற்றி கூற ஒன்றும் இல்லை என்று கருணாநிதி தெரிவித்தார்.

No comments:
Post a Comment