சமூக வலைதளமான டிவிட்டரில் 9 லட்சம் பார்வையாளர்களை வைத்துக் கொண்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் குஜராத் முதல்வர் மோடி இணையதளம் மூலம் நேரடியாக உரையாடியதன் மூலம் மற்றொரு சாதனையை புரிந்திருக்கிறார்.
கூகுள் பிளஸ் இணையதளம் மூலமாக நேற்று இரவு மோடி தமது உரையாடலை நடத்தினார். இதில் அரசியலுக்கு தடை விதிக்கபப்ட்டிருந்தது. சுவாமி விவேகானந்தர் பற்றிய இந்த உரையாடல் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக மோடியின் யூ டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றின் மூலம் சுமார் 5 ஆயிரம் கேள்விகள் பெறப்பட்டன.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டிருக்கின்றன. மோடியும் சளைக்காமல் பதில் கூறியிருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அரசியல் மோசமனது என்று நினைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். மதச்ச்சார்பின்மை என்பது வாக்கு அரசியலுக்காக திரிக்கப்பட்டு சொல்லப்பட்டு வருகிறது என்றும் மோடி கருத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதோடு மட்டும் நின்றுவிடவில்லை!
இந்த உரையாடலில் பங்கேற்க ஒரே நேரத்தில் பல இணையதள வாசகர்கள் முயன்றதால், கூகுள் இணையதளமே முடங்கிப் போகும் நிலைமையும் உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு வாசகர்கள் கூட்டல் அலைமோதியது!
No comments:
Post a Comment