15 நாடுகள் கூட்டு முயற்சியில் 200 கிலோமீட்டர் தூரத்தில் ஆகாயத்தில் சர்வதேச விண்வெளி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு ஆகாயத்தில் நிறுவபட்ட இந்த 4,50,000 கிலோ எடையுள்ள விண்வெளி ஓடம் 2016 ஆண்டு வரை பணியாற்றும். இது பூமியில் நடக்கிற நிகழ்வுகளையும் பூமிக்கு வெளியே அண்டத்தில் நடக்கிற நிகழ்வுகளையும் ஆராய விஞ்ஞானிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. இதன் பராமரிப்பிற்காக பல்வேறு குழுக்கள் மேலே சென்று பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
6 பேர் கொண்ட 32 வது விண்வெளிக்குழு கடந்த மாதம் ஜூலை 1 முதல் செப்டெம்பர் 17 வரை விண்வெளி நிலையத்தில் தங்கி பணியாற்ற அங்கு சென்றுள்ளது. இந்த குழுவில் இந்திய வம்சா வழிப்பெண்ணான சுனிதா வில்லியம்சும் ஒருவர். 240 சோதனைகளை செய்யவுள்ள அக்குழுவினரில் சுனிதா வில்லியம்ஸ் நாளை விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து 6 1/2 மணிநேரம் ஆகாயத்தில் நடந்தவாறு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சரிசெய்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி நாசா விண்வெளி நிறுவன தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றும் இதில் மனித ஆராய்ச்சி, உயிரியல் மற்றும் இயற்பியல் விஞ்ஞானங்கள், தொழில்நுட்பம் மேம்பாடு, கல்வி மற்றும் பூமி கண்காணிப்புகள் பற்றிய அறிய கண்டிபிடிப்புகள் உலகிற்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment