இலங்கையிலிருந்து கூட்டம் கூட்டமாக தமிழகத்துக்கு வந்த சிங்களவரை வெளியேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதற்காக தங்களுடைய விரோதத்தை காண்பிக்கும் வகையில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கால்பந்து விளையாட வந்த மாணவர்களை தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. திருவாரூரில் உள்ள சர்ச்சுக்கு வந்த பக்தர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களிடையே நட்பு சக்தியை ஊக்குவிப்பதை விட்டு திருப்பி அனுப்பியது தவறான செயலாகும். இதனால் இருநாட்டு மக்களின் உறவு முறைகள் பெரிதும் பாதிக்கப்படும். வரும் காலத்திலாவது இலங்கை மக்களுடன் மனதிற்கு இசைவான நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment