இலங்கையில் 9 மாகாணங்கள் உள்ளன. அதில் 3 மாகாணங்களில் கவுன்சில் தேர்தல் சமீபத்தில் நடந்தது. அதை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதில் அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 33 உறுப்பினர்களை கொண்ட வட மத்திய மாகாணத்தில் 21 இடங்களை அக்கட்சி பிடித்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 11 இடங்களையும், மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
பல இன மக்கள் வாழும் மேற்கு மாகாண கவுன்சிலில் 37 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தமிழர் கட்சியான தமிழர் தேசிய கூட்டணி 11 இடங்களை பிடித்து தோல்வி அடைந்தது. அங்கு ராஜபக்சேவின் கட்சி 14 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
இவை தவிர இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களிலும், ஐக்கிய தேசிய கட்சி 4 இடங்களிலும், அல்ட்ரா சிங்கள தேசிய சுதந்திரா முன்னணி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
தென்மேற்கு மாகாண கவுன்சில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதிலும், ராஜ பக்சேவின் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் ஒற்றுமையாய் ஆகுங்க...அப்புறம் இந்தியாவில் உள்ள தமிழர்களின் ஆதரவைப் பெறலாம்.......
ReplyDelete