உலகின் நிதிபற்றிய செய்திகளை தாங்கி வரும் பத்திரிகை ப்ளூம்பெர்க் வர்த்தக பத்திரிகை ஆகும். இந்த பத்திரிக்கை உலக பொருளாதரத்தில் செல்வாக்கோடு உள்ள ஐம்பது பேரின் பெயர்களை பட்டியல் இட்டுள்ளது.
அமெரிக்க தொழில் அதிபர் வாரென் பப்பட்டு, பேஸ் புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க், ஹூண்டாய் தலைவர் சங் மாங் கூ ஆகியோர் முன்னிலை பெறுகின்றனர். அதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஐம்பதாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி பற்றி ப்ளூம்பெர்க் பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து மேற்கு வங்க மாநில ஆட்சியை பிடித்த மம்தா பானர்ஜி நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறார்.
வெளிநாட்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரதமர் மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்த அறிக்கையை தடுத்து நிறுத்தினார்.
இந்த செய்கையின் மூலம் உலக வர்த்தக அளவில் ஒரு சாதாரண மனிதனின் பிரச்சினையை வெற்றிகரமாக கையிலெடுத்து அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.கொள்கைகள் உருவாக்குவதில் சிறந்து அவர் விளங்குகிறார்.
இவ்வாறு அப்பதிரிக்கை கூறியுள்ளது.
வர்த்தகம் சிறப்பாக நடைபெற சிறந்த கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உருவாக்குவதில் திறமையாக விளங்குபவர்களையே தேர்ந்தெடுப்பதாக அந்த பத்திரிக்கை கூறியுள்ளது. மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஞ்சு ஜெயின் மற்றும் ப்ரீத் பரார ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment