யாழ்ப்பாண போரில் தியேட்டர் உரிமையாளர் வெளியேறியதால் அந்த தியேட்டரை மந்திரி டக்ளஸ் அபகரித்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஸ்ரீதர் தியேட்டர் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் ரத்தின சபாபதி மகேந்திர ரவிராஜ். 16 ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்களப் படைக்கும் கடும் சண்டை நடந்தது. இதனால் யாழ்ப்பாணத்தை விட்டு தமிழர்கள் வெளியேறினார்கள்.
தியேட்டர் அதிபர் ரவிராஜ் ஆஸ்திரேலியா சென்று மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார். இதைப்பயன்படுத்தி அவரது சினிமா தியேட்டரை தற்போதைய இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி மந்திரி டக்ளஸ் தேவானந்தா கைப்பற்றிக் கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது பற்றி “தி ஆஸ்தி ரேலியன்” பத்திரிக்கைக்கு தியேட்டர் அதிபர் ரவிராஜ் அளித்த பேட்டி வருமாறு:-
யாழ்ப்பாணத்தில் உள்ள எனது ஸ்ரீதர் தியேட்டரை மந்திரி டக்ளஸ் தேவானந்தா கையகப்படுத்தி வைத்திருக்கிறார். 16 வருடமாக அவர் வாடகை கூட தரவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள எனது சொத்துக்களை மீட்க சட்ட நிபுணரை அமர்த்துமாறு நண்பர்களிடம் சொன்னேன். ஆனால் யாரும் மந்திரிக்கு எதிராக நிற்க தயாராக இல்லை. ஏனெனில் அவரைப்பற்றி அங்கு அவ்வளவு பயம் இருக்கிறது. அவரிடம் இருந்து தியேட்டரை மீட்பது கடினம். இந்த வழக்கு வருடக்கணக்கில் இழுத்துச் செல்லப்படும் என்று நண்பர்கள் கூறினார்கள்.
1996-ம் ஆண்டு தியேட்டரை தன்வசப்படுத்தும் முயற்சியாக என்னுடன் பேசினார். சண்டை முடிந்ததும் தியேட்டரை நான் மீண்டும் திறக்கப்போகிறேன் என்றேன். அதற்கு அவர் நீங்கள் எப்போது தியேட்டரை திறப்பதாக இருந்தாலும் நான் விட்டுவிடுகிறேன் என்றார். இதனால் நான் சம்மதித்தேன். ஆனால் அதன்பிறகு தியேட்டரை திறப்பது பற்றி அவரிடம் பலநூறு தடவை பேசினேன். பல கடிதங்களை அனுப்பினேன். எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
இந்த விஷயத்தில் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அவர் ஆபத்தானவர் என்று சொல்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையும் ஆபத்தில் முடிந்து விடலாம். இனிமேலும் என்ன நடக்கப் போகிறது என்று தெரிய வில்லை. நான் எப்போது கேட்டாலும் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று டக்ளஸ் கூறினார்.
ஒவ்வொரு வருடமும் அவர் இதனைத்தான் சொல்கிறார். நான்தான் தியேட்டர் அதிபரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். நான்தான் உரிமையாளர் என்பது யாழ்ப்பாண மக்கள் அனைவருக்கும் தெரியும். தியேட்டர் வாடகையை எனது கூட்டாளியுடன் கொடுத்து வருவதாக சொல்கிறார். அவர் சொன்னபடி கூட்டாளி யாரும் இல்லை. வாடகை தரவும் இல்லை.
இவ்வாறு ரவிராஜ் கூறினார்.
இலங்கை மந்திரி டக்ளஸ் மீது கடத்தல்-கொலை வழக்கு இந்தியாவில் உள்ளது. இந்த வழக்கில் இந்தியாவில் அவர் தேடப்பட்டு வருகிறார் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment