ப்ரீ-பெய்டு செல்போன்களுக்கு அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து பரிசு விழுந்து இருப்பதாக எஸ்.எம்.எஸ். தகவல் வருகிறது. அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், உங்கள் தொலைபேசி நம்பர் லாட்டரி குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உடனே இந்த எண்ணில் தொடர்பு கொண்டால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
சிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு, குறிப்பிட்ட அந்த எண்ணில் தொடர்பு கொள்வார்கள். அதன்பிறகே அது மோசடியானது என்று தெரிய வரும். ஆனால் ஐ.எஸ்.டி.யில் பேசியதால், கணிசமான ப்ரீ-பெய்டு பணம் போய்விடும்.
சில வெளிநாட்டு மோசடி நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள செல்போன்களுக்கு மிஸ்டுகால் அனுப்பி மக்கள் பணத்தை ஏமாற்றி சுரண்டி வருகின்றன. 2 லட்சம் பணம் கட்டினால் ஒரு கோடி கிடைக்கும் என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் நிறுவனங்களும் உள்ளன.
சந்தேகப்படும்படி வரும் இத்தகைய மிஸ்டுகால் அழைப்புகளையும், அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் எஸ்.எம்.எஸ்.களை நம்பாதீர்கள். அதில் தொடர்பு கொண்டாலோ, பதில் அனுப்பினாலோ உங்கள் பணம் பறிபோய் விடும். எனவே அறிமுகம் இல்லாத நம்பர்கள் வரும் போது தவிர்த்து விடுங்கள் என்று போலீசார் பல தடவை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
என்றாலும் வெளிநாட்டு மோசடிக்காரர்களிடம் இந்தியர்கள் ஏமாறுவது தினமும் வாடிக்கையாகி விட்டது. பணத்தை பறிகொடுக்கும் வாடிக்கையாளர்கள், இதுதொடர்பாக புகார் கொடுப்பதும் சமீப காலமாக அதிகரித்து விட்டது.
இதையடுத்து தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் விருப்பம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஐ.எஸ்.டி. வசதியை கொடுங்கள். மற்றவர்களுக்கு ப்ரீ-பெய்டு செல்போனில் உள்ள ஐ.எஸ்.டி. வசதியை ரத்து செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களது ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பி ஐ.எஸ்.டி. வசதி வேண்டுமா? என்று கேட்கும். ஐ.எஸ்.டி. வசதி வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்களது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் தெரிவிக்காத ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களின் ஐ.எஸ்.டி. வசதி 60 நாட்களுக்குப் பிறகு துண்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment