மகராஷ்டிராவில் பீகார் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பால்தாக்கரே, உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே எல்லோருமே பீகாரிலிருந்து மகராஷ்டிராவுக்குள் ஊடுருவியவர்கள்தான் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தாக்கரே குடும்பத்தினர் பீகாரைச் சேர்ந்தவர்கள். இங்கிருந்து போய் மகராஷ்டிரா மாநிலத்தில் செட்டிலாகியிருக்கின்றனர். மும்பைக்குள் ஊடுருவியவர்கள் அவர்கள். அவர்கள் விரைவில் மும்பையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.. மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூர் என எங்கு வேண்டுமானாலும் போய் பணி புரியலாம்.
மகாராஷ்டிராவை நிர்மாணித்ததில் பீகாரிகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் ஒருபோதும் பிரச்சனையில் ஈடுபடுகிறவர்கள் இல்லை. அவர்கள் அங்கே முழுமையாக வாழ உரிமை இருக்கிறது.
தாக்கரேக்கள் வட இந்தியர்களுக்கு எதிராக குறிப்பாக பீகாரிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதையே கொள்கையாக வைத்திருக்கின்றனர். இந்த விவகாரத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சரியாகக் கையாளவில்லை.இங்கிருந்து மகராஷ்டிரா போய் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட அந்த மாநில அரசைத்தான் நிதிஷ் அதிகம் புகழ்ந்தார் என்றார் அவர்.
No comments:
Post a Comment