மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஒரு பைத்தியம் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.
மும்பைக்குள் வரும் பிகாரிகள் அனைவருமே ஊடுருவல்காரக்கள் என்று ராஜ் தாக்கரே கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த நிதிஷ், ராஜ் தாக்கரேவின் பேச்சு இந்த நாட்டுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள நேரடியான சவால்.
இது போன்ற ஒரு நபரை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்தத் தவறினால், தீவிரவாதிகளை எப்படி இந்த நாடு சமாளிக்கும் என்று தெரியவில்லை.
மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது நிர்வாகத்தை ராஜ் தாக்கரேவிடம் அவுட்சோர்ஸ் செய்துவிட்டது என்று நினைக்கிறேன்.
பிகார் மக்களின் சுயமரியாதையோடு இந்த உலகத்தில் எவனும் விளையாட முடியாது. அவர்களை மும்பையை விட்டும் வெளியேற்ற முடியாது.
மனிதர்களுக்குள் மோதலைத் தூண்டிவிட்டு, வெறுப்புணர்வில் குளிர்காய்ந்து, அரசியல் லாபம் பார்க்கும் இது போன்ற நபர்கள் (ராஜ் தாக்கரே) நாட்டுக்கே ஆபத்தானவர்கள். டாக்ஸி டிரைவர்களை தாக்கி அதை வீடியோவில் பதிவு செய்து, டிவி சேனல்களுக்குக் கொடுத்து ஒளிபரப்ப வைத்து ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
இவர்களது வீடியோவை டிவிக்கள் ஒளிபரப்பாவிட்டாலே போதும், அவர்கள் (சிவசேனா, ராஜ் தாக்கரே) கடையை (அரசியலை) மூடிவிட நேரிடும்.
அதேகதைதான் நிதீஷுக்கும்............ நித்தீஷின் செய்திகளையாரும் பிரசுரிக்காமல்,ஒலிபரப்பாமல் இருந்துவிட்டால் போதும் இவர் கடையை கட்டவேண்டியதுதான்.....வாஜ்பாய் அமச்சரவையில் இவர் மந்திரியானதே பா.ஜ.க.வினால்தான் அந்த நன்றியை மறந்த அவர் இன்று பா.ஜ.க. யாரை பிரதமர் வேட்பாளராக நியமிக்கவேண்டும் இவர்பேசக்கூடிய அளவிற்கு போய்விட்டார்........எனவே இவரும் நாவடக்கி பேசவேண்டும்.....
ReplyDelete