தனது காதலருடன் தனது தோழி உறவு கொண்டு விட்டதாக ஆத்திரமடைந்த ஒரு பெண், தனது தோழி மீது சுடு தண்ணீரை எடுத்து ஊற்றி விட்டார். இதில் அந்தத் தோழி படுகாயமடைந்தார். தற்போது சுடுநீரை ஊற்றிய பெண்ணுக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுடுநீரை ஊற்றிய பெண்ணின் பெயர் எடித் விரெடு. இங்கிலாந்தின் கேன்டர்பரி பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு தனது தோழி டெரினா ஒமடுக் மீது சந்தேகம் வந்துள்ளது. தனது காதலருடன் டெரினா படுக்கையைப் பகிர்ந்து கொண்டு விட்டதாக அவர் சந்தேகப்பட்டார்.
இதையடுத்து தனது தோழியை வீட்டுக்கு வரவழைத்தார். பேசிக் கொண்டிருந்தபோது திடீரென முன்கூட்டியே தயாராக வைத்திருந்த சுடிநீரை எடுத்து தோழி மீது ஊற்றி விட்டார். இதில் டெரினா அலறித் துடித்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து விரெடு கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைதாகியுள்ள விரெடுவுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சமீபத்தில்தான் தனது காதலரைப் பிரிந்தார். ஆனால் பிரிந்த காதலருடன் டெரினா உறவு வைத்திருப்பதாக சந்தேகம் வந்ததைத் தொடர்ந்தே அவரை அழைத்து சுடுநீரை ஊற்றி விட்டார்.
No comments:
Post a Comment