ஈ வில்லன் நடிகர் சுதீப் இன்றைக்கு மோஸ்ட் வான்டட் வில்லன். முதல் படம் ப்ளாப் ஆனவுடன் சீரியல் பக்கம் ஒதுங்கியவரை சேது படத்தின் கன்னட ரீமேக் ஆன கிச்சா மீட்டெடுத்தது. இதனால் கன்னட திரையுலகமே கிச்சா சுதீப் என்று கொண்டாடியது. வாலி, ஆட்டோகிராப், சிங்கம் ரீமேக்கில் நடித்து பிஸியான ஹீரோவாக இருந்தவரை தெலுங்கில் ஈகா படம் மூலம் சிறந்த வில்லனாக்கினார் எஸ். எஸ். ராஜமௌலி. இது தமிழில் டப்பிங் செய்யப்பட்டாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
நான் ஈ படத்தில் ஈயிடம் நடுங்கும் சுதீப்புக்கு உண்மையிலேயே வெள்ளிக்கிழமை என்றால் நடுக்கமாம். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதானாம். வெள்ளிக்கிழமை சுதீப் நடித்த படம் ரிலீஸ் ஆனால் அன்றைக்கு முழுக்க மரணபயத்தில் இருப்பாராம் சுதீப்.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான பயம்!.
No comments:
Post a Comment