Wednesday, September 5, 2012

கவர்ச்சியாக நடிப்பேன்: ‘சுப்பிரமணியபுரம்’ ஸ்வாதி


சுப்பிரமணியபுரம்படத்தில் நாயகியாக நடித்தவர் ஸ்வாதி. போராளிபடத்திலும் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். மலையாள படங்களிலும் நடிக்கிறார்.

ஸ்வாதி கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் தமிழில் படங்கள் இல்லை. மற்ற நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வாய்ப்புகளை தட்டிபறித்து வருகிறார்கள். இதையடுத்து ஸ்வாதி மனம் மாறியுள்ளார். கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கவர்ச்சி என்பது சினிமாவில் ஒரு அங்கமாகி விட்டது. எனவே கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளேன். நடிகைகள் போட்டிகளை சமாளிப்பதற்காக கிளாமருக்கு மாறவில்லை. மலையாளத்தில் ஆமென்என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment