ஏழு வயதிற்குட்பட்ட, சர்வதேச பள்ளிகளுக்கான செஸ்
சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ஜூயஸ்
டி போராவில் நடந்தது. நேற்று முன்தினம் முடிவடைந்த
இந்த போட்டியில் மும்பையை சேர்ந்த ஏழு வயது
சிறுவன் தேவ் ஷா சாம்பியன்
பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
மும்பையிலுள்ள
திருபாய் அம்பானி பள்ளியில் படித்து
வரும் தேவ் ஷா சவுத்
மும்பை செஸ் அகாடமியில் பயிற்சி
மாணவராக இருக்கிறார். 9-க்கு 7.5 புள்ளிகளை வென்று சாதனை படைத்துள்ள
இவர் உலக செஸ் கூட்டமைப்பு
வழங்கும் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தையும் பெற
தகுதி பெற்றுள்ளார். இவருடைய தற்போதைய சர்வதேச
ரேட்டிங் 1448 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment