பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.94 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.78பைசாவாகவும் விற்பனை செய்யப்படும். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்படுவது இது 8-வது முறை ஆகும் என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment