எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடக்கொரியா எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணினிகளிலிருந்து தகவல் திருடப்பட்டுள்ளன. இதற்கு வடகொரியாதான் காரணமாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
ஏனெனில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட ’த இன்டர்வியு’ என்கின்ற திரைப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட இருந்த நிலையில், சோனி நிறுவனத்தின் கணினிகள் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதால் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த செயலில் வடகொரியா ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவின் பெயரும் சேர்க்கப் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடகொரியா தேசிய பாதுகாப்பு கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தங்கள் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகை, பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும்’ என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், த இன்டர்வியு திரைப்படத்தில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-ஐ கொலை செய்யத் திட்டமிடுவது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment