Friday, December 19, 2014

சென்னை ரெயிலில் பெண் என்ஜினீயர் மீது சிறுநீர் கழித்த வாலிபர்

சேலம் வந்த சென்னை ரெயிலில் பெண் என்ஜினீயர் மீது சிறுநீர் கழித்த போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெண் என்ஜினீயர் 

திருச்சி சிட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராதா(வயது24)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வேலை சம்பந்தமாக கோவையில் இருந்து நேற்று  இரவு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு டிக்கெட் முன்பதிவு செய்து எஸ்–9 பெட்டியில் வந்து கொண்டிருந்தார்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராதா மீது தண்ணீர் ஊற்றுவது போல இருந்ததால் அலறியடித்து எழுந்தார். அப்போது எதிர் படுக்கையில் இருந்த நபர் தன் மீது சிறுநீர் கழிப்பதை கண்டு ராதா கூச்சல் போட்டார். இதனால் அந்த பெட்டியில் உள்ள படுக்கையில் அயர்ந்து தூங்கிகொண்டிருந்த அனைத்து பயணிகளும் திடுக்கிட்டு எழுந்தனர்.

வாலிபர் கைது 

பின்னர் ரெயிலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரிடம் ராதா புகார் செய்தார். உடனே ரோந்து போலீசார் சிறுநீர் கழித்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுதொடர்பாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்–இன்ஸ்பெக்டர் சபரிராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

இதில் அந்த வாலிபர் திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த நரேந்திரபாபு (24) என்பது தெரியவந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார். குடிபோதையில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் ராதா மீது சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து நரேந்திரபாபுவை கைது செய்தனர்..

No comments:

Post a Comment