விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த 'ஐ'படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.
இதன் பட வேலைகள் 2012 லேயே துவங்கின. வெளிநாடுகளில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டது.இந்த படத்தின் பாடல்களை ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சென்னைக்கு அழைத்து வந்து வெளியிட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வருகிறது.
இதில் விக்ரம் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். உடற்பயிற்சியாளர் கேரக்டரில் அவர் வருகிறார். மனிதனும், மிருகமும் கலந்த இன்னொரு கெட்டப்பிலும் தோன்றுகிறார்.கடந்த பிப்ரவரி மாதம் 'டப்பிங்'மற்றும் ரீ ரிக்கார்டிங் பணிகள் துவங்கின. செப்டம்பர் மாதம் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.
எனவே படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .தற்போது பொங்கலுக்கு 'ஐ'படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய திரையுலக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'ஐ' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தடிரைலர் தற்போது ரசிகர்கள்டையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. ஹாலிவுட் படமான தி ஹாப்பிட்டுடன் இணைத்தும் இந்த டிரெய்லரை வெளியிட்டு உள்ளனர். ஹாலிவுட் படத்துடன் வரும் முதல் தமிழ் பட டிரெய்லர் இதுவாகும்.
இந்நிலையில் நேற்று 'ஐ' படம் சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு யுஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. யுஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் வரிச்சலுகை கிடைக்காது என்பதால் படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் யுஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டதாக சென்சார் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஐ' திரைப்படம் சமீபத்தில் யூ/ஏ சர்டிபிகேட் பெற்றது. ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ஐ' படத்திற்கு கேளிக்கை வரி பெற வேண்டுமானால் படத்திற்கு யூ சான்றிதழ் கிடைக்க வேண்டும்.
படக்குழுவினர் எவ்வளவோ வாதாடியும், வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி சென்சார் அதிகாரிகள் 'ஐ' படத்திற்கு யூ சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே படக்குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யூ சான்றிதழ் பெறும் திட்டத்தில் படக்குழுவினர் உள்ளனர். ரிவைசிங் கமிட்டிக்கு 'ஐ' படம் செல்வதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின் போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி திருவிழா நடைபெறும், தெலுங்கு பிலிம் சேம்பர் ஏற்கனவே விதித்துள்ள விதியின் படி சங்கராந்தி போன்ற முக்கிய திருவிழா நேரங்களில் டப்பிங் படங்கள் ரிலீஸ் செய்ய ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அனுமதி கிடையாது. இந்த விதியை காரணம் காட்டி நேரடி தெலுங்கு படம் ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்கள் பிலிம் சேம்பரில் 'ஐ' படத்தினை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக தெலுங்கு பிலிம் சேம்பர் உறுதியளித்துள்ளது. இதனால் 'ஐ' படம் தெலுங்கில் வெளியிட தடை விதிக்கப்படும் என தெரிகிறது. இதனால் ஷங்கர் உள்பட 'ஐ' படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 5000 தியேட்டர்களுக்கு மேல் ஒரே நேரத்தில் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் இந்த படம் டப் செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment