உலகின் பொதுவான மொழியாக இசை திகழ்கிறது என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பேசினார்.
லக்ஷ்மன் ஸ்ருதியின் சார்பில் 10-ஆம் ஆண்டு "சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது. இந்த இசை நிகழ்ச்சியை அப்துல் கலாம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது: மனிதர்களுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான பரிசு இசையாகும். உலகின் முதல் மொழியும் இசைதான். இசைப் பிரியர்கள், கலைஞர்களுக்குப் புனித தலமாக விளங்குவது திருவையாறு.
இந்தத் திருவையாறு கீர்த்தனைகளை சென்னையில் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அதிகளவில் இசைக் கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள். இது இசைத் துறைக்கு நல்லதாகும். இளைஞர்களும் கர்நாடக இசையின் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி அதை மேலும் ஊக்குவிக்கும்.
மத்திய, மாநில அரசுகள் இசைக்கும் இசைக் கலைஞர்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேண்டும். கர்நாடக இசை, உலகம் முழுவதும் ஒலிக்கவேண்டும்.
இசை மனித வாழ்வை செம்மைப்படுத்துவது. அது நம்மை இறைவனோடு சேர்க்கும்.
நல்ல இசைதான் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் தொடர்பாக இருக்கும். இசை இல்லாத வழிப்பாட்டுத் தலங்களே இல்லை. இசைக்கு ஜாதி, மதம் என எதுவும் இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது. உலகின் பொது மொழி இசைதான். இசை வாழ்வை வளப்படுத்தும் என்றார் அப்துல் கலாம்.
இதில் திரைப்பட நடிகர் விவேக், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இசைக் கலைஞர் பி.எஸ். நாராயணசாமி குழுவினரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. விழாவின் ஒரு பகுதியாக நாகஸ்வர கலைஞர் திருவிழா ஜெய்சங்கருக்கு "இசை ஆழ்வார்' விருதை அப்துல் கலாம் வழங்கினார்.
"சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சி டிசம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு இசைக் கலைஞர்களின் 52 இசை நிகழ்ச்சிகள் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment