உலக அளவில் பல்வேறு துறைகளில் அரிய சாதனை படைப்பவர்களை கவுரவித்து வரும் கின்னஸ் சாதனை புத்தகம், தனது 60வது ஆண்டுவிழாவை முன்னிட்டு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் உள்பட 60 வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி பாராட்டி உள்ளது. இது குறித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் முதன்மை ஆசிரியர் கிரெய்க் கிளெண்டே கூறுகையில், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் சச்சின். அவர் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.
எங்கள் புத்தகத்தின் 60வது ஆண்டு விழாவில் அவரை கவுரவிப்பதில் மிகுந்த பெருமை அடைகிறோம்’ என்றார். இந்திய அணிக்காக 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடி உள்ள சச்சின் டெஸ்ட் (15,921) மற்றும் ஒருநாள் போட்டிகளில் (18,426) அதிக ரன் குவிப்பு, அதிக சதம் (51 மற்றும் 49), உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பு, ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் உள்பட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment