பட்டாபட்டி என்ற படத்தின் நாயகனாக நடித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் முத்தக்காட்சியில் நடிக்க ரொம்பவே தயங்கி விட்டாராம். மதுரை மண்ணின் நகைச்சுவை உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உருவாகி வரும் இப்படத்தை சன்ரா மீடியா, பிலிக்கர் ஸ்டூடியோ தயாரிக்கின்றன. கதைப்படி நாயகிக்கு, நாயகன் முத்தம் கொடுக்க வேண்டும். இந்த காட்சியை அறிமுக இயக்குனர் யுவராஜ், நாயகன் சடகோபனிடம் விளக்கியிருக்கிறார். முதலில் நடிக்க தயங்கிய சடகோபன், பின்னர் காட்சியின் முக்கியத்துவம்(?) கருதி முத்தம் கொடுக்க தயாரானார். முதலில் முத்தம் கொடுத்தபோது ரொம்பவே உதறல் எடுத்திருக்கிறது சடகோபனுக்கு. இதனால் காட்சியில் திருப்தி இல்லாத இயக்குனர், மீண்டும் மீண்டும் அந்த காட்சியை படமாக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 12 டேக் எடுத்து முத்தக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த முத்தக்காட்சி எடுக்கப்பட்டதற்கு மறுநாள் சடகோபனுக்கு கமையான காய்சசல் வந்துவிட்டதாம்(?)!. சடகோபன் ரமேஷ் ஏற்கனவே சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment