அஜீத் நடிக்கும் பில்லா 2-க்கான படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
பில்லா -2 குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், "பில்லா -2 திரைப்படம் ஏப்ரல் மாதம் இறுதி முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. எனக்கு எப்போதுமே பிடித்தமான நடிகர் அஜீத். அவருடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தின் கதை தென் தமிழ்நாட்டில் தொடங்கி கோவாவுக்கு பயணமாகும்.
பில்லா முதல் பார்ட்டை விட இப்படத்தில் அஜீத் வயது குறைந்தவராக இருக்க வேண்டும். இப்பொழுது அவர் ஜார்ஜ் கூலுனி மாதிரி செக்ஸியாக வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்திற்காக இருக்கிறார். பில்லா - 2 படத்திற்காக அவர் முழுவதுமாக மாற இருக்கிறார். என்னுடைய பில்லா டீம் அனுவர்தன், கேமரா மேன் நிரவ் ஷா அவருடைய புதிய வடிவத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்தில் புதிய வடிவமாக இருக்கும்.
நடிகர் பிரபு கண்டிப்பாக பில்லா -2விலும் இருப்பார். கதாநாயகி தேர்வு பணி நடைபெற்று வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருவது போல் செக்ஸியாகவும், ஸ்மார்ட்காவும் இருக்கும் வகையில் நாயகி தேர்வு பணி நடைபெற்று வருகிறது," என்று கூறியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
No comments:
Post a Comment