அண்மை காலமாக நடிகை பூஜாவை பற்றி பல்வேறான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து விட்டார் என்றும், திருமணம் இன்னும் தான் செய்ய போகிறார் என்றும் பல்வேறான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், பூஜா ஆங்கிலம்- உருது மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார் பூஜா. இது குறித்து அவர் கூறியது: பிபிசி ஆங்கிலம்-உருது மொழிகளில் படம் ஒன்றை தயாரிக்கிறது. இதில் ஹீரோயினாக நடிக்க பேச்சு நடக்கிறது. இந்திய பின்னணியில் நடக்கும் கதை என்பதால்,
இதில் நடிக்க கேட்டுள்ளனர். இதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதே நேரம், இப்படம் குறித்த அனைத்து விவரங்களும் இன்னும் முடிவாகாமல்
உள்ளன. விரைவில் பட அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறேன்.நான் சினிமாவிலிருந்து விலகி விட்டதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறுகிறார்கள். இது உண்மையல்ல. பெங்களூரில் எனது நண்பர்கள் சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்துகின்றனர். அதில், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன். இப்போதைக்கு தனிமையை விரும்புகிறேன். குடும்பத்தாருடன் பொழுதை கழிப்பதும் சந்தோஷமாக இருக்கிறது. திருமணத்தைப் பற்றி யோசிக்க வில்லை. எனது அப்பாதான் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார். சிலரது போட்டோக்களையும் காட்டினார். எல்லோருமே வெளிநாட்டு மாப்பிள்ளைகளாக இருந்தனர். திருமணத்துக்கு பின் வெளிநாட்டில் செட்டிலாகும் விருப்பம் இல்லை. இவ்வாறு பூஜா கூறினார்.
No comments:
Post a Comment