பிப்ரவரி 19-ந் தேதி உலககோப்பை போட்டிக் தொடக்க உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று பெங்களூரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், காம்பீரும் களமிறங்கினர். போலின்ஜர் பந்தில் 6 ரன்களுக்கு காம்பீர் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கோலி 21 ரன்களை சேர்த்து ஹஸ்டிங் பந்தில் ஆட்டமிழந்தார். ஷேவாக் மட்டும் அதிகபட்சமாக 54 ரன்களை எடுத்து கிரேஷா பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, யூசுப் பதான் ஒரளவு நின்று விளையாடி 32 ரன்களை சேர்த்தார். பிரட் லீ ரன் எதுவும் எடுக்கமாமல் சாவ்லா பெவிலியன் திரும்பினார். அஷ்வின் 25 ரன்களும்,நெக்ரா 19 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடக்க ஆட்டகாரர்களான வாட்சன் 33 ரன்கள் எடுத்து ஸ்ரீசாந்த் பந்தில் ஆட்டமிழந்தார். பைனி 37 ரன்களில் யுவராஜிடம் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக பாண்டிங் 57 ரன்கள் எடுத்து ஹர்பஜன் பந்தில் ஸ்டார்ப்ஆவுன் ஆனார்.
பின்னர் களமிறங்கியவர்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியாக 37.5 ஓவரில் 176 ரன்களை மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிடம் தோற்றது. இந்திய அணி சார்பில் சாவ்லா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹர்பஜன் 3 விக்கெட்டுகளையும், அஷ்வின், ஸ்ரீசாந்த், யுவராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை விழ்த்தினர்.

No comments:
Post a Comment