உலகில் மிக வேகமாக செல்லும் போர் விமானங்களில் ஒன்றான எப்-16 ரக விமானத்தில் பறந்து சாதனை படைத்தார் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்.
போர் விமானங்கள் பற்றி எல்லா தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சர்வதே போர் விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஏரோ இந்தியா என்ற பெயரில் பெங்களூரில் கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விமான கண்காட்சி நடந்தது. இதில் உலகம் முழுவதிலிருந்து பல்வேறு நாட்டு போர் விமானங்கள் இடம்பெற்றன.
இதில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் உலகின் அதிவேக விமானங்களில் ஒன்றான எப்-16 ரக விமானத்தில் பறந்து அசத்தினார். இந்த விமானத்தில் பறந்த முதல் நடிகரும், 2வது இந்தியரும் ஆவார். இதற்கு முன்னர் தொழிலதிபர் ரத்தன் டாட்டா இந்த விமானத்தில் பறந்து இருக்கிறார். விமானம் மிக வேகமாக பறக்கும் என்பதால், கடந்த ஒரு மாதமாக ஷாகித் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். இதற்காக பல கட்ட மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதன்பின்னர் தான் விமானத்தில் பறந்து இருக்கிறார் ஷாகித். விமானத்தில் விமானிக்கு அருகில் அமர்ந்து இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

No comments:
Post a Comment