ஊர் கூடி தேர் இழுப்பதில் என்ன சாகசம் வந்துவிடப் போகிறது? ஆனால் ஒருவர் இழுக்கும் தேர் அது. இழுப்பவர் பாலா. நகர்வது தமிழ்சினிமாவின் பெருமை! அண்டை மாநில சினிமா இயக்குனர்களையும் அசர வைத்துக் கொண்டிருக்கும் பாலா ஒரு படத்தை துவங்குகிறார் என்பதும் தலைப்புச் செய்தி. முடிக்கிறார் என்பதும் தலைப்புச் செய்திதான்.
இந்த படத்தை தொண்ணு£று நாளில் திரைக்கு கொண்டு வருவேன் என்று அவன் இவன் துவக்க விழாவில் சொன்ன பாலா, சுமார் 250 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தே விட்டார். நேற்றுதான் இப்படத்திற்கு பூசணிக்காய் உடைத்தார்கள். (படம் முடியும் கடைசிநாளன்று நடக்கும் சம்பிரதாயம் இது. நாத்திகரான பாலா யூனிட்டிலும் அது நடக்கும், வேறு வழியில்லை)
நான்கு நாட்களுக்கு முன்பே தனது போர்ஷனை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஷால் இந்த பூசணி உடைப்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மீண்டும் தேனிக்கு போனார். அன்றிரவே பார்ட்டி அமர்க்களப்பட்டதாம். பாலா இயக்கும் படம் முடிவடைகிறது என்றால் சும்மாவா?

No comments:
Post a Comment