துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின் மூலம் தனுஷ் அறிமுகமானபோது அவருக்கு பெரிய பிரேக்கைத் தந்த படம் திருடா திருடி. அந்த நன்றிக்காக தனுஷ் தற்போது நடித்துள்ள படம் சீடன். திருடா திருடி சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகம் ஜெய்கிருஷ்ணா - நாடோடிகள் அனன்யா ஜோடிதான் நாயகன் - நாயகி என்றாலும் தனுஷ் சமையல் கலைஞராக வித்தியாசமான கெட்டப்பில் வேஷ்டி - சட்டையுடன் கதர் காசி துண்டு சகிதம் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். காரணம் மேற்படி நன்றிக்கடன்தான்!
சுமார் 25 நாட்கள் கால்ஷீட்டும் கொடுத்து தனுஷூம் ஒரு நாயகர் எனும் அளவில் சீடனின் பிஸினஸ் பெரிய அளவில் பேசப்பட காரணமாயிருக்கிறார் தனுஷ். அதனால் சீடனின் ஆடியோ ரீலிசை தொடர்ந்து நடந்த மீடியா மீட்டில் தனுஷை வாய் ஓயாமல் ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளினார் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா! இப்படி இயக்குனர் பேச வேண்டும் என்பதாலோ என்னவோ, அடியோ ரீலிஸில் மட்டும் கலந்து கொண்ட தனுஷ், மீடியா மீட்டில் கலந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆனது தனிக்கதை

No comments:
Post a Comment