போயஸ் கார்டனின் கதவுகளை திறந்தே வைத்திருக்கிறார்கள். எலக்ஷன் நேரமல்லவா? கடந்த சில தினங்களாக திரையுலகத்திலிருந்து கிளை தேடி அலையும் பறவைகள் அதிகரித்திருப்பதன் விளைவு, தீனியோடு காத்திருக்கிறது போயஸ் கார்டன். நேற்றைய பரபரப்பு... எஸ்.ஏ.சந்திரசேகரன் -ஜெ சந்திப்புதான். சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தது இந்த சந்திப்பு. வரும் தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தினரின் முடிவு, விஜய்யின் தேர்தல் பிரச்சாரம் பற்றியெல்லாம் அப்போது பேசியதாக கிசுகிசுக்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
அடுத்த செய்தி ஒரு இணைப்பு பற்றியது. நு£ற்றுக்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றிய அனில் மல்நாட் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுக வில் இணைத்துக் கொண்டார். ஆன்ட்டனி மற்றும் அவரது சிஷ்யர்களின் ஆதிக்கம் திரையுலகில் அதிகரித்து வருவதும், பழங்கால தொழில் நுட்பங்கள் நசிந்து புது புது விஞ்ஞான உபகரணங்கள் வந்துவிட்டதாலும் அனில் போன்றவர்களுக்கு வாய்ப்பில்லை. அவர் அரசியலுக்குள் நுழைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
கிட்டதட்ட இதே காரணம்தான் நடிகர் சரவணன்-ஜெ சந்திப்புக்கும். பருத்தி வீரன் சித்தப்புவுக்கு முன்பு போல பட வாய்ப்புகள் இல்லை. அந்த படத்திற்கு பிறகு கேரக்டர் ரோல்களில் நடித்திருந்தால் ஏராளமான படங்கள் வந்திருக்கும். ஆனால் ஹீரோவாகதான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார் சரவணன்.
சந்திப்பின் போதே சரவணனுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கிய ஜெ, அவரை தேர்தல் பிரசாரத்திற்கு செல்லுமாறு பணித்திருக்கிறாராம்.

No comments:
Post a Comment