வாசலில் கோலம் போட்டு விட்டு போனது அதிர்ஷ்டம். ஆனால் பின்னாலேயே மழையை பொழிந்தது விதி. இப்படிதான் இரண்டே வரியில் விவரிக்கவேண்டியிருக்கிறது அங்காடி தெரு மகேஷின் திரையுலக பிரவேசத்தை.
ஹிட் படத்தில் நடிக்காவிட்டாலும், பேச்சு சாமர்த்தியத்தாலேயே நாலைந்து படங்களை வளைத்து போட்டு நடிக்கும் இளம் நடிகர்கள் மத்தியில் அப்பாவியாக இருக்கிறார் மகேஷ். இல்லையென்றால் அங்காடி தெரு என்ற வெற்றிப்படம் வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அடுத்த படத்தை நமது கண்களில் காட்டாமல் இருப்பாரா?
அங்காடி தெரு வெளிவந்த நேரத்தில் ஏராளமான முன்னணி இயக்குனர்கள் அவரை நாடி கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் குழப்பத்திலேயே காலத்தை தள்ளிய மகேஷ் கடைசியாக ஒப்புக் கொண்டது ஒரு புதியவர் இயக்கும் படத்தில்.
'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' என்ற அந்த படம், இப்போது அவ்வளவு வேகமாக நகரவில்லையாம். இந்த படத்தை முடித்துவிட்டுதான் இன்னொரு படத்தில் நடிப்பேன் என்றும் கையெழுத்திட்டிருக்கிறாராம் மகேஷ்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த மகேஷை பணக்காரராக்குமா சினிமா?

No comments:
Post a Comment