பருத்தி வீரன் படத்திற்கு மீண்டும் அமீர் இயக்கும் 'ஆதிபகவான்' படத்தில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுதா சந்திரன், தெலுங்கு நடிகை கருணா நடிக்கின்றனர். ஜெ.அன்பழகன் தயாரிக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இதையடுத்து இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விஜய்யை சந்தித்த அமீர் அவரிடம் கதையொன்றை கூறியிருக்கிறார். விஜயக்கு கதை பிடித்திருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது குறித்து அமீர் கூறுகையில் "மவுனம் பேசியதே" படத்துக்கு பிறகு நான் கதை சொன்னது விஜய்க்குதான். ஆனால் அதை சில காரணங்களால பண்ண முடியல. இப்பவும் விஜய்ய வச்சு ஒரு படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன். விஜய்யோட இன்றைய இமேஜ், அவருகிட்ட இருக்கிற திறமை இதை மனசுல வச்ச ஒரு படம் பண்ணுவேன். அதுக்கான காலம் சீக்கிரமே வரும்' என்றார் அமீர். தற்போது விஜய் வேலாயுதம், நண்பன் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment