தமிழையும் தாண்டி இந்தியில் வசூல் சாதனை படைத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சிறுவர்களிடம் கதை கேட்க தயாராகி வருகிறார். விஜய் டிவி தயாரிக்கும் ஒரு நிகழ்ச்சிக்காகத்தான் முருகதாஸின் இந்த கதை கேட்கும் படலம் ஆரம்பமாக இருக்கிறது.
புதுமையான நிகழ்ச்சிகளை அளித்து பெரியவர்களையும், சிறியர்களையும் பரவசப்படுத்திவரும் விஜய் தொலைக்காட்சி, மற்றொரு புதுமையான நிகழ்ச்சியாக "ஸர்ஃப் எக்ஸெல் லிட்டில் பிக் ஃபிலிம்" என்ற நிகழ்ச்சியை ஓளிபரப்ப இருக்கிறது. குழந்தைகளின் கற்பனை திறனுக்கு சவால் விடும் இந்த மாறுபட்ட நிகழ்ச்சியின் மூலம், கதை கேட்கும் குழந்தைகளை கதை சொல்லவும், எழுதவும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.
பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் முதல் கட்டமாக சென்னை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் சுமார் 100 பள்ளிகளுக்கு விஜய் டிவி குழுவினர் நேரடியாகச் சென்று 10 முதல் 14 வயது நிறம்பிய பள்ளி மாணவர்களை 'கறை நல்லது' என்ற தலைப்பில் கதைகளை எழுதச்சொல்லி சேகரித்து வந்தது. இதைத்தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான விளம்பரங்களைப் பார்த்து தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்தும் குழந்தைகள் சொந்தமாக அவர்கள் கைப்பட கதைகளை எழுதி அனுப்பியிருந்தனர். மொத்தம் பதினோராயிரம் கதைகள் வந்து குவிந்ததில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதிலிருந்து சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நிகழ்ச்சிக்கு தயார்படுத்தவுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகை சுஹாசினி ஆகியோர் இந்த தேர்வுக்குழுவில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை அந்தக் குழந்தைகளே "ஸர்ஃப் எக்ஸெல் லிட்டில் பில் ஃபிலிம் மேக்கர்ஸ்" நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சுஹாசினியின் முன்னிலையில் சொல்கின்றனர். இவர்களில் இருந்து சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் ஒரு குறும்படம் எடுக்க உற்சாகப்படுத்துகிறது இந்த நிகழ்ச்சி. குழந்தைகளின் கற்பனைத் திறனில் உருவான இந்த கதைகளை குறும்படமாக எடுக்க தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கதைகளை தேர்ந்தெடுப்பது முதல், அக்கதையை படமாக்குவது, திரைக்கதை அமைப்பது, படத்தொகுப்பு, பின்னணி இசையமைப்பது ஆகிய அனைத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகள் பங்குபெறுவர். இந்த குழந்தைகள் எப்படி படமெடுக்கிறார்கள் என்பதை நிகழ்ச்சியாக தொகுத்து நேயர்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது விஜய் டிவி.

No comments:
Post a Comment