ரீமேக்கில் குறைகளை சரி செய்யும் சித்திக்!
மலையாள பட உலகின் முன்னணி இயக்குனரான சித்திக் தமிழிலும் அசத்தி வருகிறார். தன்னுடைய படங்கள் காமெடி காட்சிகளை சூப்பராக அமைத்து கடைசியில் சென்டிமேன்ட்டையும் அழகாக சேர்த்துவிடுவார் சித்திக்க. தற்போது விஜய் வைத்து காவலன் ஹிட் படத்தை கொடுத்த சித்திக், வழக்கமான குணம் ஒன்றை பின்பற்றி வருகிறார். அதாவது தன்னுடைய படங்கள் வேறுமொழிகளில் ரீமேக் எடுக்கும்போது முந்தைய படத்திலிருந்த குறைகளை சரி செய்து கொள்வாராம் டைரக்டர் சித்திக்.
கோலிவுட்டில் ஹீரோயினாக நடிக்கும் கனவில் சென்னை வந்த மும்பை வரவு சஞ்சனா, ‘ரேனிகுண்டா’வில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்தார். பிறகு ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘கோ’, ‘கஜன்’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். ‘ரதம்’ படத்தில் தலைவாசல் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், அவரது ஹீரோயின் கனவு நிறை வேறியுள்ளது. ‘விலை’யை தொடர்ந்து காமராஜ் இயக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாகி விட்டதால், இனி சஞ்சனா ஒரு பாடலுக்கு ஆட மாட்டாராம்.
12 அவதாரம் எடுக்கும் சந்தானம்
காமெடி நடிகர் சந்தானம் ஜீவாவுடன் இணைந்து நடித்திருக்கும் சிங்கம் புலி படத்தில் 12வித்யாசமான வேடங்களில் நடித்துள்ளார்.
சில்வர் லைன் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில், சாய்ரமணி இயக்கியிருக்கும் படம் "சிங்கம்புலி". இப்படத்தில் முதன்முறையாக ஜீவா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஜீவாவுடன் திவ்யா ஸ்பந்தன், சந்தானம், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காமெடியில் தனக்கென்று ஒரு பாணியை வைத்து கவுண்டமணியை போன்று லொள்ளு பண்ணிவரும் சந்தானம், இந்தபடத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.ராஜேந்தர் என 12 வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறாராம். இவருடன் ஜீவா சேர்ந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். சந்தானம் 12வித்யாசமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை. இப்படம் பிப்.11ம் தேதி திரைக்கு வருகிறது.



No comments:
Post a Comment