தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று மூன்று வேடம் ஏற்றுள்ள சசிகுமார் தன்னுடைய அடுத்தபடமான போராளி படத்தினை ஏப்ரலில் ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
"சுப்ரமணியபுரம்" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இந்தபடத்தில் ஜெய்யுடன், சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து "நாடோடிகள்" படத்தில் கதாநாயகனாகவும், "பசங்க" படத்தில் தயாரிப்பாளராகவும் வந்தார். கடைசியாக இவர் இயக்கி, சமீபத்தில் வெளிவந்த "ஈசன்" படம் சொல்லும்படியாக இல்லை. இதனால் சற்று அப்செட்டான சசி, அதனை மறந்து தன்னுடைய அடுத்த படமான "போராளி" படத்திற்கான வேலையை துவங்கி விட்டார்.
சசியிடம் உதவி டைரக்டராக இருந்து, நாடோடிகள் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான சமுத்திரகனி தான் போராளி படத்தை இயக்குகிறார். படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்துடன் படத்தை தயாரிப்பவரும் சசி தான். படத்திற்கான நாயகி தேடும் பணி நடைபெற்று வருகிறது. சசிகுமாருடன் கஞ்சா கருப்பு, அலரி நரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். வம்சம் படத்தின் இசையமைப்பாளர் தாஜ் நூர், இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் முதல் போராளி படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது.

சமுதிரகனி சசியின் உதவியாளர் இல்லை என்ற சிறு விஷம் கூட உமக்கு தெரியாதா????
ReplyDelete