சொல்லியடிக்கிற சூரன்னு கம்பீரமா கிளம்பி வந்த தயாரிப்பாளர்கள் பத்து பேர், எண்ணி அடிக்கிறாரே கரண் என்று இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமா ஹீரோக்களில் முதல் நான்கைந்து பேரை தவிர மற்ற ஹீரோக்களின் போஸ்டர்களை கால்நடைகள் கூட கண்டு கொவதில்லை. இந்த நேரத்தில் நான்தான் டாப். பேசுன சம்பளத்தை எண்ணி வை என்று மென்னியை பிடிக்கிற ஹீரோக்களை பார்த்தால் என்ன வரும்?
ஆனால் அது கூட வராமல் அடங்கிக் கிடக்கிறார்களாம் சூரன் படத் தயாரிப்பாளர்கள். பத்து பேர் ஆளுக்கு இருபது லட்சம் போட்டு துவங்கிய படம் அது. ஆனால் இதுவரைக்குமே நாலு கோடிக்கும் மேல் செலவாகிவிட்டதாம். ஐம்பத்தைந்து லட்சம் சம்பளம் பேசி, அதில் நாற்பது லட்சத்தை சுளையாக வாங்கிக் கொண்ட கரண், மீதி பணத்தை வைத்தால்தான் டப்பிங் பேச வருவேன் என்கிறாராம்.
நீங்க நடிச்ச படம் எல்லாம் ரிலீஸ் பண்ண முடியாத தேங்கி நிக்குது. நாங்க மட்டும் படத்தை சீக்கிரம் முடிச்சு என்ன பண்ண போறோம். டப்பிங்கை இன்னும் நாலு மாசம் கழிச்சு வச்சுக்கிறோம் என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.
இப்போதாவது நிஜத்தை புரிந்து கொள்ள முயல்வாரா கரண்?

No comments:
Post a Comment