நாக்பூர் படவிழாவில் பங்கேற்ற தென்மேற்கு பருவகாற்று படத்திற்கு, சிறந்த தமிழ்பட விருது கிடைத்துள்ளது.
நாக்பூரில் உள்ள நிர்சார் திரைப்படக் கழகம் சார்பில், இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் 2-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தில் சார்பில் "இளைஞன்", "தென்மேற்கு பருவக்காற்று" உள்ளிட்ட படங்கள் பங்கேற்றன. இதில் "இளைஞன்" படத்திற்கு சிறந்த வசனகர்த்தா விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் கருணாநிதிக்கு பதிலாக, அவர் சார்பில் நடிகை குஷ்பு, டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, படத்தின் நாயகன் பா.விஜய் ஆகியோர் பெற்று கொண்டனர்.
அதேபோல் இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் புதுமுகம் விஜய்சேதுபதி, வசுந்தரா, சரண்யா ஆகியோர் நடித்த "தென்மேற்கு பருவக்காற்று" படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருது கிடைத்துள்ளது. படத்தை பார்த்த நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவு நெகிழ்ந்து போயினர். குறிப்பாக நடிகை சரண்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டினர். அத்துடன் சிறந்த தமிழ்படமாக தென்மேற்கு பருவக்காற்றை தேர்ந்தெடுத்தனர். இப்படத்திற்கான விருதினை படத்தின் தயாரிப்பாளர் சிபு ஐசக் பெற்றுக் கொண்டார்.

No comments:
Post a Comment