"வம்சம்" படத்தி்ற்குபிறகு இசையமைத்ததின் மூலம் பிரபல இசையமைப்பாளர்கள் வரிசையில் இணைந்துவிட்ட இசையமைப்பாளர் தாஜ்நூர் அடுத்து "எத்தன்", "போராளி" "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி", இயக்குநர் சசியின் உதவியாளர் யுவராஜ் இயக்கும் ஒரு புதிய படம் உள்ளிட்ட அரைடஜன் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார்.
இதில் சண்முகராஜன் இயக்கத்தில் "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி" படத்தில் திருக்குறளில் உள்ள காமத்துப்பால் அத்தியாயத்தில் இருந்து காமரசம் சொட்டும் 16 திருக்குறள்களை சேர்த்து, கோர்த்து வாங்கிய ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதியின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்தபாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பு என்பது தாஜ்நூரின் நம்பிக்கை!
இப்பாடலை பிரபல பின்னணி பாடகி சுஜாதாவின் பெண்வாரிசு சுவேதாவின் குரலிலும், ஜேசுதாஸின் வாரிசு விஜய் ஜேசுதாஸின் குரலிலும் கேட்கும் 96ம், 16 போன்று துள்ளும் என்பது முன்னதாகவே இப்பாடலை தாஜ்நூரின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் கேட்ட நம் போன்ற மீடியாக்காரர்களின் நம்பிக்கை!
நிச்சயம் காமத்துப்பால், தாஜ்நூரின் இசையில் ஆண், பெண் வித்யாசமின்றி அனைத்து தரப்பையும் கவரும்!

No comments:
Post a Comment