புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்கும் கார்த்தி!
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறுத்தை' கார்த்திக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. காமெடி காட்சிகளில் கார்த்தியின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி புதுமுக இயக்குனர்களுக்கு கார்த்தி சிறப்பான வரவேற்பு அளிப்பதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. அடுத்த படத்துக்காக சில புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் கார்த்தி.
ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சரண்யா மோகன்
ஏற்கனவே தெலுங்கில் நடித்த சரண்யா மோகன், மீண்டும் அங்கு நடிக்க வந்த அழைப்புகளை மறுத்திருக்கிறார். தமிழில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே ஆசை. அதற்காக, தாய்மொழி மலையாளத்தில் கூட புதுப்படம் ஏற்கவில்லையாம். ‘வேலாயுதம்’ படத்தில் மீண்டும் தங்கையாக, விஜய்யுடன் நடித்து வருகிறார். இதனால், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமே என்ற கவலை இல்லை என்கிறார். ஓய்வு நேரத்தில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘யாரடி நீ மோகினி’ படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறாராம். மூன்று வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வாராம்.
கதையுடன் இணைந்த நகைச்சுவைக்கே முக்கியத்துவம்
பிஸியாக இருக்கிறார் சந்தானம். எல்லா படத்திலும் ஒரே மாதிரி கெட்டப் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம். எந்த கேரக்டருக்கு எந்த மாதிரி வசனம் பேசினால் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்கும் அவர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், தனியாக அமர்ந்து, ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் கொடுத்த வசனத்துடன் தனது ஆலோசனையை சேர்த்து எழுதுகிறார். அதற்கு இயக்குநரும் உடன்பட்டால், அந்த காமெடியை செய்கிறார். தனி டிராக்காக இல்லாமல், கதையுடன் இணைந்த நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்.



No comments:
Post a Comment