தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா, தனது யோகா குருவானா பரத் தாக்கூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சில படங்களில் நடித்து வந்த பூமிகா, தற்போது தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்.
தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கும் பூமிகா, இதனால் ரொம்பவே மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறாராம். திருமணத்திற்குப் பிறகு சினிமா பத்திரிகை ஒன்றை ஆரம்பித்த பரத், அதன் மூலம் பெருத்த நஷ்ட்டத்தை சந்தித்தாராம். மேலும் 'தகிட தகிட' என்ற படத்தை தயாரித்தன் மூலமும் பல கோடிகளை இழந்திருக்கிறார். இந்த பணம் அனைத்தும் பூமிகாவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு பூமிகாவின் பணத்தை வைத்து துபாயில் யோகா பள்ளி ஒன்றை ஆரம்பித்த பரத் தாக்கூர், அங்குவரும் பெண்களிடம் தொடர்புவைத்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் இதனை மறுக்கும் பரத், பூமிகாவின் பொற்றொரிடம் இது வெறும் வதந்திதான் இதை நம்ப வேண்டாம் என்று சமரசம் செய்திருக்கிறார். இருப்பினும் இதை ஏற்காத பூமிகா, விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்.

No comments:
Post a Comment