அம்மா நடிகைன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எல்லோருமே பாராட்டுகிறார்களாம் - சரண்யாவை.
கமல்ஹாசனுடன் நாயகியாக நாயகன் படத்தில் அறிமுகமான சரண்யா, ஹீரோயினாக ஜொலிக்கவில்லை. ஆனால் இன்று ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவுக்கு அம்மா வேடத்தில் அசத்தி வருகிறார் சரண்யா.
இவர் அம்மா வேடத்தில் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் என்பதால் அம்மா வேடமா, கூப்பிடு சரண்யாவை என்பதை எழுதப்படாத சட்டமாகவே வைத்துள்ளனராம்.
எந்தப் படத்தில் அம்மா வேடம் என்றாலும் முதல் சாய்ஸாக சரண்யா இருக்கிறார். குறிப்பாக கிராமத்துக் கதையாக இருந்தால் சரண்யாவை மட்டுமே அணுகுகிறார்கள்.
எந்த ஊர்த் தமிழாக இருந்தாலும் அதை அனாயசமாக பேசி அசத்துகிறார் சரண்யா என்பதும் அவருக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.
அம்மா வேடத்திற்கு குறிப்பாக தமிழ்க் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் அம்மா நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ரொம்பவே பஞ்சம் நிலவுகிறது. இது சரண்யாவுக்கு சாதகமாக உள்ளதால் அம்மா வேடத்தில் இப்போதைக்கு அவர்தான் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார்.
அம்மா வேடத்தில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும் கூட பந்தா காட்டுவதோ, பகட்டு செய்வதோ கிடையாதாம் சரண்யா. மாறாக, கதையை மட்டும் கேட்டுக் கொண்டு நடிக்க ஒப்புக்கொள்கிறார். சம்பளம் அதிகம் வாங்குபவராக இருந்தாலும் கூட டிமாண்ட் செய்வதில்லை என்றும் புகழ்கிறார்கள் சரண்யாவை.

இப்போதைய பெஸ்ட் தமிழ் அம்மா நடிகை சரண்யா பொன்வண்ணன் - சரியே
ReplyDelete