மார்ச் 1 ந் தேதியில் இருந்து படப்பிடிப்பை ஆரம்பிக்க போகிறார்களாம். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஷ¨ட்டிங் பற்றிதான் இப்படி ஒரு தகவல். அப்ப இதுவரைக்கும் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது? எல்லாம் ஒரு டெஸ்ட் ஷ§ட், அவ்வளவே!
இந்த படத்தில் உதயநிதிக்கு என்ன கேரக்டர்? வெகு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது அது. ஆனாலும் நம் காதுகளுக்கு வந்த தகவல் அப்படியே உங்களுக்கு. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி சார் பாண்டு மாஸ்டராக நடிக்கிறார். (பூ மழை து£வி... ரீ மிக்ஸ் இருக்குமோ) இது போக ஓய்வு நேரத்தில் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கிற வேலையும் பார்ப்பாராம். அங்கேதான் இவருக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் முளைக்கிறது! இப்படி படம் பற்றி நாலே வரிகளில் கதைத்துவிட்டு போகிறது முக்கியமான சோர்ஸ்.
இது போகட்டும்... இன்னொரு முக்கியமான செய்தி. இவர் வாங்கி வெளியிட்ட மைனா, மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்கள் தாறு மாறான ஹிட் என்பதால் அதை கொண்டாடும் விதத்தில் ஒரு விழா எடுக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம்.
நமுத்துப் போன தீப்பெட்டியெல்லாம் கூட நாக்கு எரிய பேசும்போது, இந்த வெற்றியெல்லாம் சிவகாசி சர வெடியாச்சே? கொளுத்துங்க சாரே...

No comments:
Post a Comment