ஆறிப்போன 'சாயா' மாதிரி ஆகிவிட்டார் சாயாசிங் என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அவரது தற்போதைய நிலைமை அப்படியல்ல என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தமிழில் திருடா திருடி படத்தில் அறிமுகமான சாயாசிங், அப்படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலம் சின்னஞ்சிறு கிராமத்தையும் சென்றடைந்தார். அப்புறம் வந்த வாய்ப்புகள் எல்லாம் சாயாவை முன்னேற விடாத சங்கிலியாகவே அமைந்தன.
விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று ஆசைப்பட்டவருக்கு தங்கச்சி வாய்ப்புதான் என்கிற அளவுக்கு தொழில் ஸ்தானம் படு வீக் என்றானது. இதையாவது மன்னிக்கலாம். பெயர் தெரியாத ஹீரோக்களுடன் எல்லாம் டூயட் பாடினார் இந்த வெள்ளிவிழா நாயகி.
போதும் இந்த பொல்லாத தமிழ்நாடு என்று கோபித்துக் கொண்டு வங்காள மொழி நோக்கி சென்றவருக்கு ரத்தின கம்பள வரவேற்பாம். அங்கேயே ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்துக் கொண்டு அப்படத்தை தானே இயக்கியும் கொண்டிருக்கிறாராம்.
மாநிலம் தாண்டிய மன்மத ராணிக்கு இதுவாவது சந்தோஷத்தை தரட்டும்!

No comments:
Post a Comment