என்னதான் தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் இருந்தாலும், மண்வாசனை மிக்க படங்களுக்கு இன்றும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. அத்தகைய படங்கள் என்றாலே அது பாரதிராஜாதான். அந்த இயக்குநர் இமயத்தின் இடத்தில் ஒரு அறிமுக இயக்குநரை வைத்து பாராட்டியிருக்கிறார் ஒரு வெற்றிப்பட இயக்குநர்.
எப்.சி.எஸ். கிரியேசன்ஸ் சார்பில் துவார் சந்திரசேகரன் தயாரிப்பில், 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஏகாதசி தான் அந்த பாராட்டுக்குரியவர். பல வெற்றிப் பாடல்கள் எழுதியிருக்கும் ஏகாதசி, இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றிகான இருக்கிறார்.இவர் இயக்கியிருக்கும் 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படம் முழுவதுமாக முடிவடைந்த வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. அதற்குமுன் தமிழ் திரையுலக இயக்குநர்களுக்கு தனது முதல் படைப்பை திரையிட்டு காட்டியிருக்கிறார்.
படத்தை பார்த்து அனைவரும் ஏகாதசியை பாராட்ட, இயக்குநர் தருண் கோபி, ஒரு வாழ்த்து மடலையே ஏகாதசிக்கு எழுதிவிட்டார். 'திமிரு', 'காளை' ஆகிய படங்களை இயக்கியும், 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் மூலம் ஹீரோவாகவும் வலம் வந்த தருண் கோபி, "எதார்த்த தண்மையோடு உருவாகியிருக்கும் இப்படம் செம்மண்ணையும், அதில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் சரியான முறையில் காட்டியிருக்கிறது. முனை முழியாத காதல் கதை, நம் மனதை பட பட வைக்கிறது. தரமான படங்களை கொடுக்கும் இயக்குநர்களின் இடத்தில் ஏகாதசிக்கு நிச்சயம் இடம் உண்டு. சுகுமாரின் ஒளிப்பதிவு கதையோடு கைகோர்த்து செல்கிறது.
இந்த படத்தை பார்த்ததின் மூலம் ஒரு கால் நூற்றாண்டு வாழ்ந்த அனுபவத்தை நான் பெற்றேன். மண்வாசனை குறையாத இப்படத்தின் மூலம் இயக்குநர் ஏகாதசி பாராதிராஜாவின் இடத்தை நிரப்பியிருக்கிறார்" என்று பாராட்டியுள்ளார்.

No comments:
Post a Comment