'அருந்ததி' படத்திற்குப் பிறகு அனுஷ்காவின் மார்கெட் ராக்கெட் வேகத்தை வீட அதிகமாக ஏறிவிட்டது. தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வளம் வரும் அனுஷ்காவுக்கிறாகவே இரண்டு தெலுங்குப் படங்களை தமிழியில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள்.
மகேஷ் பாடு ஹீரோவாக நடிக்க, அனுஷ்கா ஹீரோயினாக நடித்த 'கலேஜா'. நாகர்ஜுனாவுடன் பிரியா மணி, அனுஷ்கா ஜோடி போட்ட 'ரகடா' ஆகிய இரண்டு படங்கள்தான் அனுஷ்காவிற்காக தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
'ரகடா' படத்தை தமிழில் 'வம்பு' என்ற தலைப்பில் பத்ரகாளி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. 'கலேஜா' படத்தை தமிழில் 'பத்ரா' என்ற தலைப்பில் குருபிரம்மா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அடிதடி, காதல், காமெடி, பிரமாண்டம் என கமர்ஷியல் மசாலாவால் தயாராகியிருக்கும், இந்த இரண்டு படங்களும் தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு படத்தில் அனுஷ்கா, ஷோலவாக கலக்கியிருக்கிறார் என்றால், மற்றொரு படத்தில் பிரியா மணியுடன் போட்டி போட்டிருக்கிறாராம்.

No comments:
Post a Comment