உறுமி என்கிற படத்தை சந்தோஷ்சிவன் இயக்குகிறார். இதில் ஆரியா, ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.
ஆனால் உறுமியில் நான் நடிக்கவில்லை என கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நான் உறுமி படத்தில் நடிக்கவில்லை. சந்தோஷ்சிவன் படங்களில் நான் நடிக்க ஆர்வமாக உள்ளேன். அவர் படங்களில் நடிப்பதன் மூலம் உலக அளவில் அங்கீராம் கிடைக்கும்.
பாலாவின் அவன் இவன் படத்தில் உள்ள டப்பிங் வேலைகள் முடிந்தபின் நான் வெளிநாடு செல்லவிருக்கிறேன்.
சில நாட்கள் அங்கு இருந்துவிட்டு மார்ச் 2-ந் தேதி திரும்புகிறேன். அதன்பின் லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை என்ற படத்தில் மாதவன், சமீராவுடன் நடிக்கவுள்ளேன்.
இவ்வாறு ஆரியா கூறினார்.
இதையும் படியுங்களேன் ....
உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல பிரபலங்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டுவரும் அதிர்ச்சித் தொடர் ...

No comments:
Post a Comment