பிரகாஷ்ராஜ், இயக்குநர் ராதாமோகன் கூட்டணியின் "பயணம்" படத்தின்மூலம் தமிழ்சினிமாவிற்கு மீண்டும் வந்திருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மார்க்கெட்டை தமிழிலும் தூக்கிபிடித்து தங்களது மார்க்கெட்டை நிரப்பிக் கொள்ளும் விதமாக "வம்பு" படத்தை வெளியிட இருக்கிறது பத்ரகாளிபிலிம்ஸ்!
அதாகப்பட்டது, நாகார்ஜூனா-அனுஷ்கா ஜோடி நடித்து தெலுங்கில் ஏழெட்டு வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "ரகடா". இந்தபடத்தை "வம்பு" எனும் பெயரில் தமிழ்படுத்தி இன்னும் சில நாட்களில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் ராவ், ஏ.வெங்கட்ராவ் எனும் இரு தெலுங்கு தயாரிப்பாளர்களும்!
டப்பிங் படங்களுக்கு டக்கராக வசனம் எழுதுவிதில் வல்லவரான ஏ.ஆர்.கே.ராஜ ராஜா வசனத்தில் தமன் இசையில் வீறுபோட்லா இயக்கத்தில் நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா மட்டுமின்றி பிரியாமணி, சார்மி உள்ளிட்ட ஜோடிகளும் நடிக்க விரைவில் தமிழ்பேச இருக்கிறது "வம்பு"

No comments:
Post a Comment