நடிக்க மட்டுமல்ல பாடவும் தெரியும் என்பதை நிரூபித்தவர் சியான் விக்ரம். ஏற்கனவே ஜெமினி, கந்தசாமி போன்ற படங்களில் பாடிய விக்ரம், இப்போது தான் நடித்து வரும் தெய்வமகன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இப்படத்தை விஜய் இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் கம்போசிங் நடந்தது. இதில் பாப்பா... பாப்பா... என்ற பாடலை பாடியுள்ளார் சியான் விக்ரம். பாடல் நன்றாக வந்துள்ளதாகவும், நிச்சயம் இந்தபாட்டு ஹிட்டாகும் என்று ஜி.வி.பிரகாஷும், டைரக்டரும் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment