இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் யுவராஜ்சிங் அதிரடி பேட்ஸ்மேனான இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். மோசமான ஆட்டம் காரணமாக யுவராஜ்சிங் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் சர்வதேச போட்டியில் இருந்து விலக நினைத்ததாக அதிர்ச்சிகரமான தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக யுவராஜ் சிங் கூறியதாவது:-
நான் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எனது பெற்றோரின் உதவிதான் இதற்கு காரணம் கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது எனக்கு மிகுந்த சோதனை நிறைந்ததாக இருந்தது. இதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிவிடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர் தான் எனக்கு சில விஷயங்களை புரிய வைத்தனர். பீல்டிங்கின் போது ஒவ்வொரு முறையும் எனக்கு காயம் ஏற்படும்.
அந்த நேரம் எனக்கு உண்மையில் மோசமாக இருக்கும் அப்போது எனது நண்பர்களும், பெற்றோரும் எனது தன்னம்பிக்கையை ஏற்படுத்தி கடினமாக பயிற்சி பெற வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
29 வயது இடதுகை பேட்ஸ்மேனான யுவராஜ்சிங் 265 ஒருநாள் போட்டியில் 7689 ரன் எடுத்துள்ளார். 12 சதம் அடங்கும். சராசரி 36.61 ஆகும்.

No comments:
Post a Comment