அறிந்தும் அறியாமலும், பட்டியல், குண்டக்க மண்டக்க உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து புன்னகைப் பூ கீதா தனது எஸ்.ஜி. பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் வித்தியாசமான படம் நர்த்தகி. இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கும் கல்கி ஒரு திருநங்கை என்பது வித்தியாசம் என்றால், இந்த படத்தின் கதை முழுதும் திருநங்கைகளைப் பற்றியது என்பது அடுத்த வித்தியாசம். அதுவும் வழக்கமாக தமிழ்சினிமாவால் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகும் திருநங்கைகளின் புனிதமான போராட்டமான வாழ்க்கை நர்த்தகியில் படம் பிடித்து காட்டியிருப்பதாக கூறுகிறார் இப்படத்தின் பெண் இயக்குனர் விஜயபத்மா.
ஒரு இளம்வயது ஆண்மகன் தன் மன உணர்வின் பாதிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக, தான் பெண்ணாக மாறிக் கொண்டிருப்பது அறிந்து படும் வேதனை என்ன? என்பதை உணர்வுப்பூர்வமாக கையாளப்பட்டிருக்கும் கதையின் மூலம் சொல்லி இருப்பதாக கூறும் இயக்குனர், அதனால் அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் நிலை என்ன என்பதையும் விளக்கியிருப்பதாக கூறியிருக்கிறார். சமீபத்தில் சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேராண்மை இயக்குனர் எஸ்.ஜனநாதன், வெளிநாடுகள் போன்று இந்தியாவிலும் திருநங்கைகளுக்கென்று தனியாக பொது கழிப்பிடங்கள் வேண்டும்! மற்ற விஷயங்களிலும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முதலில் தமிழ் சினிமாவில் திருநங்கைகளை கேலி - கிண்டல் செய்வதை நிறுத்த வேண்டும், என்றார். நியாயம்தான்!!
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment