மிகமிக மதிப்புமிக்க பெரியவர் நடத்தி வச்ச கல்யாணம் தான் சங்கரோட கல்யாணம்.
சில நேரங்களில் உண்மை என்பது கற்பனைகளைவிட வேடிக்கையாகவும் விபரீதமாகவும் மனித வாழ்வில் தோற்றம் தருவது உண்டு.
சங்கர் வாழ்வில் அதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் அவனது திருமணம் நடந்ததை சொல்லலாம்.
மணப்பொண்ணு ரெம்ப ரெம்ப அற்புதமானவள், தான்!
சங்கரும் பின்னாளில் வேண்டுமானால் பல செய்த மற்றும் செய்யாத தவறுகளை சுமக்கிறவனா இருந்து இருக்கலாம், ஆனா, கல்யாணம் செய்யும் போது மாசு மருவ்றவன் தான்!
அப்படி இருந்தவனுக்கு பின்னாளில் எப்படி இந்த கஷ்டங்கள் வந்து சேர்ந்தது? எப்படி இப்படி மாறினான் ..?
எங்கே பிசகு நடந்துச்சு ?
பிறக்கும் போது யாரும் மகான்களா பிறப்பதும் இல்லை. கேடிகளாக பிறப்பதும் இல்லை. எல்லாவரும் எழுதப்படாத வெள்ளை தாள் போன்ற மனசோட குழந்தையாக தான் பிறக்கிறோம்.!
சம்பவங்கள், சூழ்நிலைகள், படிப்பு, அறிவு, அனுபவம், சொந்தபந்தங்கள், நட்புகள் எல்லாம் மொத்தமாக சேர்த்து தான் ஒருத்தனை எப்படியெல்லாமோ திசை மாத்திடுது.
சங்கர் கூட அப்படி தான் மாற்றப்பட்டான்.
1975 சங்கரோட வாழ்க்கை திசை திரும்பி போனது இந்த வருடம் தான்.
சங்கரோட திருமணத்திற்கு இரண்டு பக்கத்திலிருந்தும் எதிர்ப்பு! ரெண்டு பேர் வீட்டிலிருந்தும் துரத்திட்டாங்க; சரியா சொல்லனும்னா அனாத மாதிரி முச்சந்திலே நின்னாங்க!
காதலை பத்தி சொல்லுறவங்கள் ஆகட்டும், காதலின் மகிமையை அதன் ஆழத்தை சொல்லுகிற திரைப்படங்கள் ஆகட்டும் காதலிச்சு பெற்றவங்க எதிர்ப்புக்கிடையில் திருமணம் செஞ்சுகிட்ட காதல் ஜோடிகள் அதன் பிறகு படும் அவஸ்த்தையை, வேதனையை அந்த வலியை சொல்ல மறந்திடுறாங்க. ஆனால் காதல் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையானதோ அந்த அளவுக்கு அதனால் ஏற்படும் ரணங்களும் உண்மையானது.
சங்கருக்கும் அப்படித்தான் எதிர்ப்பை எல்லாம் மீறி திருமணம் செஞ்சாச்சு இப்போ வீதிக்கு வந்தாச்சு இன்னும்....?
பசி ஒன்றும் சங்கருக்கு புதுசல்ல. கஷ்டங்களும் அப்படித்தான் அப்படிதான்!
சங்கர் கஷ்டங்களை விட்டாலும் கஷ்டங்கள் சங்கரை விட்டது கிடையாது. கஷ்டங்களுக்கு சங்கர் என்றால் அப்படி ஒரு பாசம் போலும்!
சங்கர் ஜெகதீஸ்வரியை நினைத்து கலங்கினான் 'நமக்கு எப்படியும் சமாளிச்சிடலாம் நம்ம கட்டிகிட்ட பாவத்துக்காக இந்த சின்ன பொண்ணுமில்ல பட்டிணி கிடக்க வேண்டியதா இருக்கு' ன்னு சங்கர் நினச்சு வேதனை படாத நிமிசமே இல்லை.
சங்கருக்கு கட்டியவளை பட்டிணி இல்லாம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு ஒரு பக்கம் . இன்னொரு பக்கம் அவளோட கற்பை பாதுகாக்க வேண்டிய கடமை வேற...! ஏழைகளுக்கு கற்பு எங்கிறது உயிரை விடவும் மேலானது இல்லையா! அதான் சங்கருக்கும் அந்த பயம் அதிகமாக இருந்தது.
கட்டியா சாப்பிடலைன்னா கஞ்சியா கூட சாப்பிடலாம். அதுவும் இல்லைன்னா பட்டினியா கூட கிடக்கலாம் நாலு சுவத்துக்குள்ள...!
ஆனா அண்டியிருக்க ஒரு குச்சிலோ குடிசையோ வேணுமே! இல்லன்னா நம்பிவந்த பொண்டாட்டியோட கற்புக்கே அல்லவா ஆபத்து வந்துவிடும்.
பசியும் பயமும் வயிற்றை பிசைந்தது.
சங்கரும் ஜெகதீஸ்வரியும் காந்தி மண்டபம் பக்கத்தில் இருந்த குழாயில வயிறு நிரம்புற அளவுக்கு தண்ணி குடிச்சாங்க ரெண்டு பேருக்குமே வயிறு சுளீர் ..சுளீர்ன்னு வலி எடுத்தது. நாலு நாளா இப்படி பசிக்கிறப்ப எல்லாம் பச்சை தண்ணிய குடிச்சா வலிக்காம வேற என்ன பண்ணுமாம்.?
பக்கத்தில் இன்ஜினியரிங் காலேஜ்ஜிலே சாரம் கட்டி வெள்ளை அடிக்கும் வேலை நடந்துகிட்டிருந்திச்சு. ஜெகதியை மர நிழலில் உக்கார சொல்லிட்டு அங்கேயிருந்த பெயிண்டர்கள்கிட்டே போனான். வேலை கேட்டான்."மேஸ்த்திரி சண்முகம் கிட்டே கேளு"ன்னு கைய காட்டினாங்க.
எப்படியும் இந்த வேலை கிடைக்கணும் அப்போது தான் வயித்துக்கு தண்ணிக்கு பதிலா கூழாவது ஊத்தலாம் என்று யோசித்தப்படி சென்றான்.
அவர் பக்கத்தில் போனான். வயசானவர்! சங்கரை பார்த்திட்டு
"என்னப்பா தம்பி! பார்த்தா படிச்ச பையனாட்டம் இருக்கே ...சாரத்து மேலே ஏறி சுவத்தில இருக்கிற அழுக்குகளையும் பாசி படர்ந்த இடத்தையும் துடைப்பத்தால துடைக்கிற வேலைத்தான் இங்கே இருக்கு பரவாயில்லையா?"
அவர் பின்னே அமைச்சர் வேலையா கொடுப்பார்! எதாவது ஒரு வேலை வேண்டும் என்பதை விட சாப்பாட்டுக்கு வழி வேண்டும் என்பதே சங்கருக்கு முதல் குறியாக இருந்தது.
"செய்றேங்க! எந்த வேலையானாலும் செய்யறேன்."-சங்கர்
"சரி என்ன கேட்கிற " பெரியவர் சண்முகம்.
"சோறு"-சங்கர்.
பசித்தவனுக்கு ரொட்டித் துண்டுதான் கடவுள்ன்னு அண்ணல் காந்தியடிகள் சொன்னதா புத்தகத்தில படிச்சிருக்கேன். சங்கருடைய அன்றைய நிலையும் அப்படித்தான்.
பெரியவர் சண்முகம் சங்கருடைய முகத்தையே உத்து பார்த்தாரு.
"சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?"
"நாலு நாளாகுது! எனக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை...என் சம்சாரத்துக்கு கொஞ்சம் சோறு கொடுங்க, சார் போதும்!" இதை சொல்லி முடிப்பதற்குள் சங்கர் கூனி குறுகி போனான். ஏறக்குறைய பிச்சை எடுக்கிற மாதிரி ஆகிடுச்சே என்று நினைத்து கொண்டான். இருந்தாலும் தன்னை நம்பி வந்தவளுக்காக உயிரையே கொடுக்கலாம் என்னும் போது காதல் மனைவிக்காக பிச்சை தானே எடுக்கிறோம் என்று மனதை தேற்றி கொண்டான்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment