மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள். ஆனால் இந்த மாற்ற சித்தாந்தத்தையே ஏமாற்றுகிற அளவுக்கு தலைவிரித்தாடுகிற ஒரே விஷயம் சினிமாக்காரர்களின் சென்ட்டிமென்ட்தான். நாளு நாளா பேதி. நடமாடக் கூட முடியாதுன்னு சொல்ற ஐயரா இருந்தாலும், வெற்றிப்படத்துக்கு பூஜை போட்டிருந்த ஐயரா இருந்தால் தொலைந்தார். நாப்கினை இடுப்பில் கட்டியாவது இழுத்து வந்துவிடுவார்கள். முந்தைய வெற்றிப்படத்தில் பயன்படுத்திய அதே ஊது பத்தியில் ஆரம்பித்து அதே கம்பெனி சூடம் வரைக்கும் அமர்க்களப்படும் இந்த நம்பிக்கைகள்!
டிஸ்கஷனுக்கு எந்த ஹோட்டலில் ரூம் போட்டார்களோ, அதே ரூம் வந்தாகவேண்டும். அதில் வேறொருவர் தங்கியிருந்தாலும் சகல செல்வாக்கையும் பயன்படுத்தி விரட்டியடிப்பார்கள். அப்படியரு சென்ட்டிமென்ட் ஆணானப்பட்ட கவுதம் மேனனுக்கே இருக்கிறது என்பதுதான் வியப்பின் உச்சம்.
வாரணம் ஆயிரம் படத்தின் போது சென்னையில் பிரபலமாக விளங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலின் அருகில் இருக்கும் ரெயின் ஓட்டலில் தங்கி கதை விவாதம் செய்தாராம். அதன்பின்பும் அங்கேயே தொடர்கிறது அவரது டிஸ்கஷன்கள். அதைவிட பெரிய ஓட்டல் எல்லாம் சென்னையில் வந்தாச்சு என்று சொன்னாலும், தனது பெரிய கண்களால் அதட்டுகிறாராம் சொன்னவர்களை!
இனிக்கிற விஷயத்தில் சென்ட்டிமென்ட்டும் ஒரு பர்பர்மென்ட்தான் போலிருக்கிறது!

No comments:
Post a Comment